தலைநிமிர வைத்த தமிழக இளைஞர்கள்: வட இந்திய பெண்ணின் பாராட்டு

தலைநிமிர வைத்த தமிழக இளைஞர்கள்: வட இந்திய பெண்ணின் பாராட்டு
தமிழகத்தில் நடைபெற்றும் வரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான இளைஞர்களின் எழுச்சி மிகு போராட்டம் உலக மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இந்த போராட்டத்தில் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள், நடிகர் சங்கம், பல்வேறு அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சிகள் ஈடுபட்டாலும், இளைஞர்களின் கண்ணியமான நடவடிக்கையே பாராட்டை பெற்றுள்ளது.
சென்னை மெரினாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுடன் சேர்ந்து களம் இறங்கினர். இருட்டி மெரினாவில் டார்ச் லைட் வெளிச்சத்தில் போராட்டத்தை நடத்தி வந்த இளைஞர்கள், பெண்களுக்கும் உரிய பாதுகாப்பை கொடுத்தது அனைவரையும் மெய்சிலிக்க வைத்தது.
பெங்களூரில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, இருட்டினை பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள் பெண்களின் மீது பாய்ந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். பெங்களூர் மட்டுமல்ல இந்தியாவின் தலைநகரான டெல்லியிலும் இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
ஆனால், சென்னையில் நடைபெற்று வந்த இந்த தொடர் போராட்டத்தில், பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட்டுள்ளனர்.
ஜல்லிக்கட்டை விட ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் அமைதியான போராட்டம் ஒட்டு மொத்த இந்தியாவுக்கு வியப்பை அளித்துள்ளது. நான்கு இளைஞர்கள் சேர்ந்தாலே, வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களைப் பார்த்துவிட்ட இந்தியாவுக்கு, தமிழ் இளைஞர்களின் அறவழிப் போராட்டம் பிரமிக்க வைத்துள்ளது.
இதனை வட இந்திய பெண் ஒருவர் பாராட்டியுள்ளார், பெண்களை மதிப்பதில் சென்னை ஆண்களிடம் இருந்து டெல்லிவாசிகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென என்.டி.டி.வி எடிட்டோரியல் இயக்குநர் சோனியா சிங் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Share:

0 comments:

Post a Comment

Recent Posts

Popular Posts

Blog Archive

Blog Archive

Search This Blog